மதுரையின் பெருமைமிகு அடையாளமாக விளங்கி வருகிறது ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம். மதுரை மாநகருக்கு இடையே வடக்கு தெற்காக மதுரையைப் பிரிக்கும் வைகை ஆற்றுக்குள் முதல் மேம்பாலமாக 1886-ம் ஆண்டு கட்டப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய முறையான சுர்க்கி, சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம், முட்டை வெள்ளைக் கரு, கருங்கற்களை பயன்படுத்தி 250 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்துடன் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டு இன்றுடன் 138 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.