ஜப்பானில் வியக்க வைக்கும் வகையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் Science Co., என்ற பிரபலமான நிறுவனம் மனிதர்களை 15 நிமிடங்களில் குளிப்பாட்டி காய வைக்கும் மனித வாஷிங் மெஷினை கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளது. இந்த வாஷிங் மெஷினுக்குள் மனிதர்கள் ஏறியதும் பாதி அளவுக்கு இதமான நீர் நிரப்பப்பட்டு சிறிய குமிழ்களுடன் சுற்றியும் வேகமாக நீர் பீய்ச்சி அடிக்கப்படும்.