அணைக்கட்டு அருகே நாளை சிறப்பு முகாம்!

59பார்த்தது
அணைக்கட்டு அருகே நாளை சிறப்பு முகாம்!
வேலூர் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் அரசு துறைகளில் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பெறுவதற்கு மாவட்ட அளவில் ஒற்றைச்சாளர முறையில் ஒருங்கிணைந்த முகாம்கள் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 21ஆம் தேதி புதன் கிழமை அணைக்கட்டு வட்டம் பீஞ்சமந்தை கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் அனைத்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு பயனடையுமாறு வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி