திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியில் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ள உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அங்குள்ள அரசு பள்ளிகள், மக்கள் நல வாழ்வு மையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வீடு வீடாக சென்று பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.
மேலும் பொதுமக்கள் சாலை குடிநீர் மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை கோரிக்கை வைத்தனர். அப்போது அங்குள்ள மக்கள் நல வாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக வந்திருந்த பொது மக்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் அப்போது கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு முறையான மருத்துவம் பார்க்கவில்லை என்பதை அறிந்து செவிலியர்களிடம் வருகை பதிவேடு சிகிச்சை குறித்த முறைகளை கேட்டறிந்து கண்டித்தார்.
பின்னர் அங்குள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கல்வி குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பைரப்பள்ளி அரசு துவக்க பள்ளி உதவி ஆசிரியை ஜோதி மணியை சால்வை அணிவித்து பாராட்டினார்
மேலும் மிட்டாளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து முட்டையுடன் கூடிய சத்துணவு சாப்பிட்டார்.