திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று(அக்.23) இரவு பெய்த கன மழை காரணமாக மன்னாற்றில் வெள்ளம் ஏற்பட்டு வெள்ள நீரானது திம்மாம்பேட்டை, ராமநாயக்கன்பேட்டை, ஆவரங்குப்பம் வரை பாலாற்றில் லேசான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆபத்தை உணராமல் வடக்குப்பட்டு பகுதியில் இருந்து ராமநாயக்கன்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு மாணவர்கள் ஆற்று வெள்ளத்தை கடந்து செல்கின்றனர்.