வேலூரில் காவலர் நல்வாழ்வு திருமண மண்டபத்தில் 17-3-1986 ஆம் ஆண்டு வேலூர் மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த காவலர் பயிற்சி முடித்து பணியிலிருந்தவர்கள் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் 40 ஆம் ஆண்டு சந்திப்பு நடைபெற்றது. இதில் தற்போது இப்பயிற்சி முடித்தவர்களில் 200 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர். இதில் 130 பேர் ஓய்வுபெற்றுவிட்டனர். இன்னும் ஒருசிலர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்கள் குடும்பத்தினருடன் இந்த 40 ஆம் ஆண்டு சந்திப்பு நடந்தது. அனைவரும் வேட்டிச்சட்டை அணிந்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி பழைய நினைவுகளைப் பேசி மகிழ்ந்தனர். மேலும் இவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் கலந்துகொண்டு நினைவுப்பரிசுகளை வழங்கினார். உணவுகள் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு இந்த விழா கொத்தட்டூர் பேட்டையில் கொண்டாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.