திரைப்படத்தில் இடுப்பை கிள்ளி அரசியல் செய்தவர் விஜய் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "Work From Home அரசியல் செய்யும் விஜய்க்கு மக்கள் பிரச்சினைகள் பற்றி என்ன தெரியும்? சினிமாவில் குடித்து, புகைபிடித்துவிட்டு டாஸ்மாக் பற்றி பேச விஜய்க்கு என்ன உரிமை உள்ளது. எனக்கும் பேசத் தெரியும். தவெக எல்லை மீறக்கூடாது. திமுகவின் பி டீம் விஜய்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.