தஞ்சாவூர்: திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று (மார்ச்.17) பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடி ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ளது.