திண்டுக்கல்: கொடைரோடு அருகே பாலத்தில் இருந்து கீழே விழுந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூரை சேர்ந்த கருப்பையா - பாப்பாத்தி தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது 40 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதா? அல்லது நிலை தடுமாறி கீழே விழுந்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.