கேரள மாநிலம் ஆலப்புழா அருகே மின்னல் தாக்கி செல்போன் வெடித்துச் சிதறியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அகில் ஸ்ரீனிவாசன் (30) என்ற இளைஞர் கிரிக்கெட் விளையாடும் போது, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதின் எதிரொலியாக செல்போன் வெடித்துச் சிதறியது. இதில் தலை, மார்புப் பகுதியில் பலத்த காயமடைந்த அகில் பரிதாபமாக உயிரிழந்தார்.