டாஸ்மாக் போராட்டத்தில் ஈடுக்கப்ட்டு கைதாகி விடுதலை செய்யப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அடுத்த ஒரு வாரத்தில் மதுக்கடைகள் முன்பு, மகளிர் அணி சார்பில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டி , போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டாலின் அவர்களே, உங்கள் கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது. உங்கள் ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் என கூறியுள்ளார்.