வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் காட்பாடி ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் நேற்று இரவு 14 CM மழை பெய்துள்ளது. குறிப்பாக கல்பதூர், எம். ஜி. ஆர் நகர் மற்றும் நேரு நகர் போன்ற பகுதிகளில் மழை நீரானது அதிக அளவில் தேங்கி இருந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மழை நீரை அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றி கொண்டிருக்கிறார்கள். காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த பணிகள் முடிவடைந்தால் அப்பகுதியில் மழை நீர் தேங்கும் பிரச்சினை சரி செய்யப்படும். எம். ஜி. ஆர் நகர் பகுதியில் தொடர்ந்து மழை நீரை வெளியேற்றி கொண்டிருக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று இரவு-க்குள் அந்தப் பணிகள் முடியும். ஊரகப் பகுதிகளில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு கால்வாய்கள், தூர்வாரப்பட்டு அதனுடைய பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.
வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு தோறும் குப்பைகளை சேகரித்து கொண்டிருக்கிறார்கள் தினமும் திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்கள் நடத்துபவர்கள் குப்பைகளை வேறு இடத்தில் எங்கேயாவது கொட்டினால் அவர்களுக்கு மாநகராட்சி தரப்பில் இருந்து அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் கோழி இறைச்சிகளை பொது இடங்களில் கொட்டினால் அவர்களுக்கும் மாநகராட்சி தரப்பில் அபராதம் விதிக்கப்படுகிறது எனக் கூறினார்.