திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் (இன்று அக்டோபர் 24)“உங்களைதேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட, அம்மணாங்கோயில் ஊராட்சியில் இயங்கி வரும் கூட்டுறவு நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிமைபொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.