ஆம்பூர் அருகே 7 கிராமங்கள் இணைந்து நடத்தும் அருள்மிகு சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் சிரசு திருவிழா
சுற்று வட்டார 50 கிராமங்களில் இருந்தும் ஆந்திரா , கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் லட்சுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பெண்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற நீண்ட வரிசையில் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு
திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள அருள்மிகு சுயம்பு ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பெரியாங்குப்பம், நாச்சார்குப்பம், விண்ணமங்கலம், கென்னடிகுப்பம் அய்யனூர், ஆலாங்குப்பம் சோலூர் உள்ளிட்ட ஏழு கிராமங்கள் இணைந்து நடத்தும் இந்த திருவிழாவானது நேற்று தொடங்கி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர் இதனைத் தொடர்ந்து இன்று அம்மன் சிரசு ஊர்வலமானது கிராமத்தில் உள்ள கரக கோயிலில் இருந்து சிரசு ஊர்வலமாக புறப்பட்டு ஏரிக்கரை பகுதியில் உள்ள கோயிலை சென்றடைந்தது இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் அங்கபிரதட்சணம் செய்தும் , கரகத்தின் மீது உப்பு மிளகு பொறி ஆகியவற்றை போட்டு தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற வழிபட்டனர்.