மேற்குவங்க சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “நான் கும்பமேளாவை மதிக்கிறேன் ஆனால் இந்த கும்பமேளாவில் எந்த திட்டமிடலும் இல்லை. ஏழைகளுக்கு கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. கும்பமேளாவில் இறந்தவர்களின் உடலை உடற்கூராய்வு செய்யாமல் மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறி இறப்பு சான்றிதழும் தர மறுக்கிறார்கள். இது மகா கும்பமேளா கிடையாது. மரண கும்பமேளா” என விமர்சித்துள்ளார்.