50 டன் சின்ன வெங்காயம் தேக்கம்

67பார்த்தது
50 டன் சின்ன வெங்காயம் தேக்கம்
திண்டுக்கல் வெங்காய மண்டிக்கு இன்று (பிப்., 20) பல்வேறு மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக உள்ளது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்ற நிலையில், இன்று கிலோ ரூ.45-க்கு விற்கப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் 50 டன் தேக்கம் அடைந்து விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. மழை சீசன் முடிந்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் சின்ன வெங்காய உற்பத்தி அதிகரித்து வருகிறது. தேக்கம் அடைந்துள்ள சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி