வேலூர் காட்பாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு 602 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 8500 பேருக்கு ரூ. 66. 66 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் அனுமதி ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.