தனியார் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

51பார்த்தது
தனியார் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
ஆம்பூர் அருகே விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளி ஆண்டு விளையாட்டு விழா.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் இயங்கி வரும் விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளி ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் பொது செயலாளர் சி. முஹம்மத் பர்வேஸ் தலைமை வகித்தார். அறங்காவலர் இஸ்பார் அஹமத், விஸ்டம் பார்க் துவக்கப்பள்ளி தாளாளர் ஹெச். அப்துல் மாலிக் வசீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சாதிக் பாட்ஷா அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக
உலக சாம்பியன்ஷிப்பின் பயிற்சியாளர், 2019 அர்ஜுனா விருது வெற்றியாளர் எஸ். பாஸ்கரன், மற்றும் இந்தியாவுக்காக 12 சர்வதேச பதக்கங்களையும், தமிழகத்திற்கு 50 பதக்கங்களையும் வென்ற விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளர் சாந்தி சௌந்தர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினர்.

தொடர்ந்து உடற்பயிற்சி, பிரமிட், யோகா மற்றும் கராத்தே பயிற்சியாளர் கண்ணன் தலைமையில் மாணவர்களின் கராத்தே சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களின் சாகச நிகழ்ச்சி கூடியிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி