தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செப்.22) முதல் செப். 28ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 295.1 மி.மீ. இயல்பை விட 25% கூடுதலாக பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.