இலங்கை அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை பெறாததால் 'விருப்ப வாக்கு' எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல் விருப்பம், 2ஆம் விருப்பம், 3ஆம் விருப்பம் என்ற அடிப்படையில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 3 மற்றும் 4ஆம் இடம் பிடித்த வேட்பாளர்களுக்கு மக்கள் அளித்த வாக்கில், 2ஆம் விருப்பம் எண்ணப்பட்டு, முதல் 2 இடங்களில் உள்ள அனுரகுமார அல்லது சஜித் பிரேமதாச ஆகியோரின் வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.