வெற்றிலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

74பார்த்தது
வெற்றிலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
கடந்த வாரம், 104 கவுளி கொண்ட இளம்பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை, 3,000 ரூபாய், கற்பூரி வெற்றிலை, 1,000 ரூபாய்; முதிகால் வெள்ளைக்கொடி, 1,500 ரூபாய், முதிகால் கற்பூரி, 500 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று, 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை, 6,000 ரூபாய், இளங்கால் கற்பூரி, 4,000 ரூபாய், முதிகால் வெள்ளைக்கொடி, 3,500 ரூபாய், முதிகால் கற்பூரி, 1,800 ரூபாய்க்கு விற்பனையானது. ஏல மண்டிக்கு வரத்து குறைவால், வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி