திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் வருமானமின்றி தவித்து வருகிறேன். தனக்கு கருணை அடிப்படையில் வேலை வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்க மனு அளித்த சம்பவம் அங்கு பரப்பரப்பை ஏற்படுத்தியது. அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் தற்பொழுது பணி யாருக்கும் வழங்கவில்லை தங்கள் மனுவின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு உறுதி அளித்தார்.