வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்கள் அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்து மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அடையாள அட்டையை பெறலாம், விபத்து தொடர்பான சிகிச்சைக்கு இது உதவும். 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டிற்கு ரூ. 395 + GST, 10 லட்சம் ரூபாய் மருத்து காப்பீட்டிற்கு ரூ 700 + GST என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவலை https://nrtamils.tn.gov.in-ல் காணலாம்.