சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார்கவிந்து தீ விபத்து.

65பார்த்தது
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து திடீர் தீப்பற்றி எரிந்தால் பரபரப்பு.

அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த
நான்கு பேர் உயிர்தப்பினர்.


சென்னையில் இருந்து ஒரு பெண் உட்பட நான்கு பேர் ஏலகிரிமலை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குளிதிகை என்ற இடத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதாமல் இருக்க திருப்பிய போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி திடீரென கார் தீப்பற்றி எரிந்துள்ளது. கார் தீப்பற்றி எரிவதை அறிந்த காரில் பயணித்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

தகவலின் பேரில் ஆம்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்னர். இருந்த போதிலும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி