வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு நேற்று மாடுவிடும் திருவிழா நடந்தது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. பின்னர் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு மாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுகள் முட்டியதால் 20 பேர் காயமடைந்தனர்.