சபரிமலை பக்தர்களின் வேன் கவிழ்ந்து விபத்து

58பார்த்தது
சபரிமலை பக்தர்களின் வேன் கவிழ்ந்து விபத்து
சபரிமலை சென்று திரும்பிய திருவண்ணாமலை பக்தர்களின் வேன் இன்று (மே 15) கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், துலா பள்ளி பகுதியில் நடந்த இந்த விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி