பக்தர்கள் பயணித்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

67பார்த்தது
பக்தர்கள் பயணித்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சென்னை ஆவடியில் இருந்து சபரிமலை நோக்கிச் சென்ற 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கவிழ்ந்த வேனை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
Job Suitcase

Jobs near you