உதகை மலை ரயில் 4 நாட்களுக்குப் பின் இயக்கம்

72பார்த்தது
உதகை மலை ரயில் 4 நாட்களுக்குப் பின் இயக்கம்
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. கனமழையால் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக நடந்த நான்கு நாட்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால், இன்று (மே 22) காலை 7.10 மணிக்கு ரயில் உதகை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி