தீபக் ராஜா படுகொலை: 5 பேர் சரண்

26200பார்த்தது
தீபக் ராஜா படுகொலை: 5 பேர் சரண்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கடந்த மே 20ஆம் தேதி பசுபதி பாண்டியன் ஆதரவாளரான தீபக் ராஜா (32) என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து, தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று (மே 22) குற்றவாளிகள் 5 பேர் தனிப்படை போலீசாரிடம் சரணடைந்தனர். தனது வருங்கால மனைவியுடன் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, வெளியே வந்தபோது, பட்டப்பகலில் 6 பேர் கும்பல் தீபக் ராஜாவின் தலையை குறிவைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். குற்றவாளிகளை கைது செய்த பிறகே உடலை வாங்குவோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி