திருச்செந்தூர் கோவிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா

74பார்த்தது
திருச்செந்தூர் கோவிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (மே 22) வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் முருகனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பலர் குழுக்களாக பாதயாத்திரை மேற்கொண்டு திருந்செந்தூரை அடைந்துள்ளனர். அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

காலை 10 மணிக்கு உச்சிகால அபிபேஷம், தீபாராதனை நடைபெறவுள்ளதால், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து வழிபாடு செய்கின்றனர். கோவில் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி