அவசர வழக்கு - உயர் நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு

83பார்த்தது
அவசர வழக்கு - உயர் நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு
சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில், அவரது பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக நீதிமன்ற உத்தரவுப்படி உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என நேற்றிரவு உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி சுப்பிரமணியம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மணி மண்டபத்தில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரனுடன், நீதிபதி ஏற்பாடுகளை பார்வையிட்டார். இதில் திருப்தி அடைந்த நீதிபதி, கூடுதலாக 2 கூடாரங்கள் மட்டும் அமைக்க உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தார்.
Job Suitcase

Jobs near you