சமீபத்தில் டெல்லியில் உள்ள சிவில்ஸ் கோச்சிங் சென்டரின் பாதாள அறைக்குள் வெள்ள நீர் புகுந்ததில் மூன்று யுபிஎஸ்சி மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பான விசாரணை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், பயிற்சி மையத்தின் உரிமையாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த டெல்லி போலீஸார், அவர்களை இன்று டீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றவாளிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.