கோவை: மேட்டுப்பாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய நிலையில், சிறுமுகை சத்தியமங்கலம் சாலையின் ஓரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில், 2 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.