பாகிஸ்தானிய காதலனை மணந்த உ.பி., பெண்

56பார்த்தது
பாகிஸ்தானிய காதலனை மணந்த உ.பி., பெண்
காதலுக்கு மொழி, இனம், தேசம் என எந்த எல்லையும் இல்லை. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நக்மா என்ற 24 வயது பெண் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் பாகிஸ்தானியர் ஒருவரை காதலித்தார். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் பாகிஸ்தானுக்கு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரது அறையில் சோதனை செய்தபோது திருமண சான்றிதழ் கிடைத்தது. தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி