சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டால் தாங்கமுடியாத வலியை கொடுக்கும். தண்ணீர் அதிகம் குடிக்காதது, சிறுநீரை அடக்கி வைப்பது, தவறான உணவு முறைகள் போன்றவை சிறுநீரக கல் சிக்கலுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படும் கிருமித் தொற்றின் காரணமாக சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு அதனால் சிறுநீர் முழுவதும் வெளியேறாமல் உப்புப் படிந்தும் சிறுநீரகக் கல்லாக மாறும் என்கின்றனர் மருத்துவர்கள்.