“தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை” - தங்கம் தென்னரசு

79பார்த்தது
“தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை” - தங்கம் தென்னரசு
தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (ஜூன் 7) ஆய்வு செய்தார். தொடர்ந்து, “தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக மாநிலத்தின் மின் தேவை அதிகரித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலத்தின் மின் தேவை உச்சத்தை எட்டியது. இருந்தபோதிலும், தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் தளவாடப் பொருள்களின் இருப்பு, தேவை மற்றும் மின்தடை ஏற்பட்டால், உடனடியாக அவற்றை நிவா்த்தி செய்ய வேண்டும். மின் நுகா்வோரிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி