ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சர்க்கரை சேர்ந்த காபியை எலிகளுக்கு கொடுத்து சோதித்துப் பார்த்தனர். காஃபைன் 1%, சுக்ரோஸ் 1%, சாக்ரீன் 0.1% கலந்த காப்பியை கொடுத்தனர். இதைப் பருகியதும் எலிகள் சுறுசுறுப்பாகின. இரவில் மட்டுமே இயங்கும் சில எலிகள் கூட பகலில் சுறுசுறுப்பாகின. இருட்டில் அடைத்து வைத்த போதிலும் அவை தூங்கவில்லை. இதிலிருந்து காபியில் இனிப்பு சேரும்பொழுது அது மூளையை சுறுசுறுப்பாக்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.