BREAKING: ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி

72பார்த்தது
குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் பலியாகினர். துருவ் ரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சி பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட உடன் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி