தேனி: வருசநாடு அருகே உள்ள சிங்கராஜபுரத்தை சேர்ந்த தமிழன் என்பவரின் மகன் ரிவன் ராஜ், அடிக்கடி குடித்துவிட்டு தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு நடந்த தகராறில் மகன் ராஜை அவரது தந்தையே வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த வருசநாடு காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தமிழனை கைது செய்தனர். தந்தையை மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.