UGC-NET 2024 தேர்வு ரத்து - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

53பார்த்தது
UGC-NET 2024 தேர்வு ரத்து - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நாட்டின் பல்வேறு நகரங்களில் நேற்று (ஜூன் 18) இரண்டு ஷிப்டுகளாக தேசிய தேர்வு முகமை (NTA) UGC-NET தேர்வு நடத்தப்பட்டன. இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்ததால் UGC-NET 2024 தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், ஒரு புதிய தேர்வு நடத்தப்படும் என்றும் அதற்கான தகவல்கள் விரைவில் பகிரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பான முழுமையான விசாரணைக்காக இந்த விவகாரம் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி