அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (அக். 10) அளித்த பேட்டியில், “நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் இதுவரையில் வெளியிடவில்லை. நீட் ரத்துக்காக கையெழுத்து இயக்கம் நடத்தி அந்த கடிதங்களை மக்கள் காலடியில் போட்டு விட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் திமுக எந்தவொரு அழுத்தமும் தரவில்லை.” என கூறியுள்ளார்.