நிர்வாகிகளின் பணிகளை ஆய்வு செய்த உதயநிதி

71பார்த்தது
நிர்வாகிகளின் பணிகளை ஆய்வு செய்த உதயநிதி
திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகளின் பணிகளை இன்று (மே 16) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மண்டலம் மூன்றுக்கு உட்பட்ட திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை இன்று அன்பகத்தில் சந்தித்தார். தொடர்ந்து, கடந்த ஓராண்டாக அவர்கள் மேற்கொண்ட ‘நீட் விலக்கு நம் இலக்கு’ கையெழுத்து இயக்கம், ‘இல்லந்தோறும் இளைஞர் அணி’ உறுப்பினர் சேர்க்கை, மாநாட்டுப் பணிகள், கழகத்தலைவர் பிறந்த நாள் விழா, நாடாளுமன்றத் தேர்தல் பணி போன்ற பணிகளை தனித்தனியாக ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி