கால்பந்து நடுவராக விருது வென்றவரை பாராட்டிய உதயநிதி

62பார்த்தது
கால்பந்து நடுவராக விருது வென்றவரை பாராட்டிய உதயநிதி
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் இந்திய அளவில் சிறந்த நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதினை வென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரர் வெங்கடேஷ் அவர்களை இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம்.‌ கால்பந்து விளையாட்டின் நடுவராக தனது பணியை திறம்பட செய்து வரும் சகோதரர் வெங்கடேஷ், மேலும் பல உயரங்களைத் தொட அவரை வாழ்த்தி மகிழ்ந்தோம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி