19 வயதுக்குட்பட்டோருக்கான ஏசிசி ஆசிய கோப்பை 2024 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய பாக்., அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 47.1 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அடுத்ததாக இந்திய அணி டிச.2 அன்று ஜப்பானை எதிர்கொள்கிறது.