தஞ்சை: திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். பிளஸ் 1 மாணவன் ஹரிபிரசாத், 7ஆம் வகுப்பு மாணவன் பிரவீன் ஆகிய இருவரும் படித்துறை அருகில் குளிக்கும் போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருவரையும் தேடிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர். உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.