பாஜக நிர்வாகி கார் மோதி 2 பேர் பரிதாப பலி

84பார்த்தது
பாஜக நிர்வாகி கார் மோதி 2 பேர் பரிதாப பலி
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் பாஜக நெல்லை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக். இவர் புதியதாக ஒரு சொகுசு கார் வாங்கியுள்ளார். இதனை அதே பகுதியை சேர்ந்த டிரைவரான பாலகுமார் என்பவர் அஞ்சு கிராமத்தில் இருந்து வள்ளியூர் நோக்கி அதிவேகத்தில் ஓட்டிச்சென்றார். அப்போது நாகராஜன்(38), வினோத்(27) ஆகிய இருவர் வளைவில் திரும்ப முயன்றபோது எதிரே வந்த பாலகுமார் ஓட்டிவந்த கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி