கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையில் குடும்பத்துடன் கடலில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது பெண் குழந்தையும், 5 வயது ஆண் குழந்தையும் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரபாகர், எஸ்தர் தம்பதி கன்னியாகுமரிக்கு சுப நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றிருந்தனர். சுப நிகழ்ச்சி முடிந்து கடலில் குளித்த போது அலையில் சிக்கிய 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.