துளசி நீரை குடிப்பதன் மூலம் பல வகையான பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம். குளிர்காலத்தில் துளசி நீரை குடிப்பதால் பல நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். துளசியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. துளசி நீரை அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்படும். சருமத்திற்கு நன்மை பயக்கும். இந்த நீரை குடிப்பதால் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடலில் மன அழுத்தம் குறையும்.