துக்ளக் நிறுவனரும் நடிகருமான சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி (84) உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதே போல் சோ ராமசாமியும் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் கடந்த 2016ஆம் ஆண்டு உயிரிழந்தார்.