தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும், பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்புடன் கூடிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டன. இதில், பலரும் இலவச வேட்டி, சேலை வாங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பொங்கல் வேட்டி, சேலைகளை இதுவரை வாங்காதவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கடைக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.